பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
தமிழ் படம் 1,2 படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் முதல் முறையாக சீரியஸ் ஆன கதை களத்தில் இயக்கி வரும் திரைப்படம் 'ரத்தம்'. இதில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இன்பினிட்டி நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்து ஆண்டே முடிவடைந்து, தற்போது ரிலீசுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். அன்றைய தினம் ஏற்கனவே 5 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த சந்திரமுகி 2 படமும் தள்ளி வைக்கப்பட்டு செப்., 28 படங்களின் ரேஸில் இணைந்தது. இதுபற்றி சமீபத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார் ரத்தம் பட தயாரிப்பாளரான தனஞ்செயன்.
இந்நிலையில் செப் 28ம் தேதி நிறைய படங்கள் வெளியாகுவதால் ரத்தம் படத்தை ஒரு வாரம் தள்ளி அக்டோபர் 6ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.