பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தபடமும் விரைவில் துவங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கான பயிற்சியில் கமல் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக கமலின் 233வது பட அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரின் 234 பட அறிவிப்பு வந்தது. இதை மணிரத்னம் இயக்க போகிறார். நாயகன் படத்திற்கு பின் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கமல் அல்லாமல் இரண்டு பிரதான கதாபாத்திரம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.