ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
ரஜினி தனது மகனை நினைத்து பாடுவது போல் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. என் முகம் கொண்ட என் உயிரே, என் பெயருக்காக பிறந்தவனே, என் குணம் கொண்ட என் உலகே, எவனையும் தாண்டி சிறந்தவனே, எனக்கு பின் என்னை தொடர்பு கொண்டு நீயே, நான் நம்பத் தகுந்த நல்லவன் நீயே, புதல்வா புதல்வா வா, புதல்வா புதல்வா வா போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‛‛ரஜினிக்காக முதல் முறையாக பாடல் எழுதி உள்ளேன். என் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற தருணங்களுக்காகவே வாழ்கிறோம். நன்றி நெல்சன், அனிருத்,'' என்றார்.




