திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

2023ம் ஆண்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் வாரம் 10 மற்றும் 11ம் தேதிகளிலேயே சில பெரிய நடிகர்களின் படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகின்றன.
தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'போலா சங்கர்' படம் ஆகஸ்ட்ட 11ம் தேதி வெளிவர உள்ளது. ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் 'ஓஎம்ஜி 2', சன்னி தியோல் நடிக்கும் 'கடார் 2' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகின்றன.
ஹிந்தியில் இரண்டு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரஜினிகாந்த், சிரஞ்சீவி படங்களுக்கு வட இந்தியாவில் அதிகமான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் இருவருக்கும் அவரவர் மாநிலங்களிலும் நிறைய தியேட்டர்களில் அவர்களது படங்கள் வெளியாகின்றன.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' டிரைலர் தமிழில் 16 மில்லியன், தெலுங்கில் 4.8 மில்லியன், ஹிந்தியில் 3.1 மில்லியன், கன்னடத்தில் 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிரஞ்சீவியின் 'போலா சங்கர்' தெலுங்கில் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுக்குமே முன்பதிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் 'ஜெயிலர்' படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'போலா சங்கர்' படத்திற்கான முன்பதிவு ஐதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற முக்கிய நகரங்களில் கூட எதிர்பார்த்த அளவு இல்லாமல் பின்தங்கியுள்ளது. தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தின் ரீமேக் தான் 'போலா சங்கர்'.