சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடிக்க 'நிலமெல்லாம் ரத்தம்' என்ற இணையத் தொடர் ஒன்று உருவாகியுள்ளது. அது பற்றி சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் அமீர் பேசியிருந்தார். இந்த இணையத் தொடர் பற்றிய அறிவிப்பு கடந்த வருடமே வெளிவந்தது. அப்போது எழாத தலைப்பு சர்ச்சை, இப்போது எழுந்துள்ளது.
எழுத்தாளர் பா ராகவன் 'நிலமெல்லாம் ரத்தம்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகம் அது. அந்தத் தலைப்பை வெற்றிமாறன் எப்படி வைக்கலாம் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக எழுந்துள்ளது. பா ராகவனின் வாசகர்கள், நண்பர்கள் சிலர் அது பற்றிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
பா ராகவன் அவரது தனிப்பட்ட இணையதளத்தில், “இயக்குநர் வெற்றிமாறன், 'நிலமெல்லாம் ரத்தம்' என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் அல்லது படம் தயாரிப்பதாகவும் இயக்குநர் அமீர் அதில் நடிப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. நெடு நாள்களுக்கு முன்னரே இச்செய்தி வந்திருக்க வேண்டும். நான் கவனிக்கவில்லை. நேற்று தற்செயலாக கண்ணன் பிரபு என்ற வாசக நண்பர் இதனைச் சுட்டிக்காட்டி, உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று பதில் சொன்னேன். பேஸ்புக்கில் இதனை ஒரு குறிப்பாக எழுதி வைத்தேன்.
இன்று புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்திருந்தது. பிறகு அதே எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்தது. தன் பெயர் பாலா என்றும் இயக்குநர் வெற்றிமாறனின் அசோசியேட் என்றும் சொல்லி, பேச வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அழைத்தேன்.
நிலமெல்லாம் ரத்தம் என்ற பெயரில் ஒரு புத்தகம் வந்திருப்பதே தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார். தாங்களே யோசித்து உருவாக்கிய தலைப்பு அது என்றார். இட்லி, தோசை என்கிற பொதுவான பெயர்களை யார் வேண்டுமானாலும் 'யோசித்து' வைக்கலாம். நிலமெல்லாம் ரத்தம் என்பதை அப்படிச் செய்ய முடியுமா?
இருப்பினும் பிரபல இயக்குநர். பெரிய படிப்பாளி என்பார்கள். ஆனால் சினிமாக்காரர்களுடன் மல்லுக்கட்டி எழுத்தாளன் வென்றதாகச் சரித்திரம் இல்லாத தேசம் இது. இரு துறை காப்பிரைட் மற்றும் ஒழுக்க நடைமுறைகளும் வேறு வேறு.
நல்லது, இதனை என் பதிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் தலைப்பை மாற்றிவிடுகிறோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் இதே தலைப்பைப் பயன்படுத்தினாலும் சரி; வேறு தலைப்பு மாற்றினாலும் சரி. என்னையோ, என் பதிப்பாளரையோ அது பாதிக்கப் போவதில்லை. தவிர, இந்த அற்பச் சுள்ளியைக் கொளுத்திக் குளிர் காயும் விருப்பமோ அவசியமோ எனக்கில்லை.
அறிவுஜீவியாக அறியப்படுவோராயினும் தமிழ் சினிமாக்காரர்கள் என்றால் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இன்னுமொரு சாட்சி. அவ்வளவுதான்,” என்று எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இணையத் தொடரின் தலைப்பை மாற்றுவாரா அல்லது அதையே பயன்படுத்துவாரா என்பது விரைவில் தெரிய வரும்.