ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதுதவிர இவர் கைவசம் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் உள்ளன. இவற்றில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ஹிந்தி படம் 'தேரே இஷ்க் மெயின்'. ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் தனுஷ், ஆனந்த் எல் ராய் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். தற்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். ‛தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்குவதாக கூறப்படுகிறது.