இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
அஜித் நடித்த துணிவு, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜான் கொக்கென். இவர், செப்டம்பர் 5ம் தேதியான இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி என்னுடைய ஆசிரியர் அஜித்குமார் தான் என்று சொல்லி ஒரு நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார். அதில், கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு பல ஆசிரியர்களை கொடுத்துள்ளார். நம்முடைய வாழ்வில் உயரவும் நம்மை நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் காரணமாக இருக்கிறார்கள். எனக்கு அது போன்ற ஒரு ஆசிரியர்தான் அஜித்குமார். எனக்கு மட்டுமின்றி அவர் ஏராளமானவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் செய்ய என்னை ஊக்குவித்தவர் அஜித். அதனால் என்னுடைய ஆசிரியரான அவருக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.