'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஜெயிலர்'. சுமார் 600 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓட்டம் இன்றுடன் பெரும்பாலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அது மட்டுமல்லாது ஷாரூக்கான் நடித்துள்ள 'ஜவான்' படம் நாளை தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகிறது. அதனால், 'ஜெயிலர்' படத்திற்கான வரவேற்பும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் இப்படம் தலா 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதர மாநிலங்களில் 200 கோடிக்கும் கூடுதலான வசூலைப் பெற்றுள்ளது.
'ஜெயிலர்' படத்தின் வசூல் சாதனை அப்படியே நிலைத்திருக்குமா, அல்லது விஜய் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள 'லியோ' படம் முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.