கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் மலையாள நடிகை மகிமா நம்பியார். “குற்றம் 23, அண்ணாதுரை, மகாமுனி, ஓ மை டாக், ஐங்கரன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் அவருடைய முக்கியமான படங்கள். மலையாளத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஆர்டிஎக்ஸ்' படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
'சந்திரமுகி 2' படத்திலும் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாதக் கடைசியில் வெளியாக உள்ள 'ரத்தம்' படத்திலும் அவர்தான் கதாநாயகி.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளிதரனின் பயோபிக் படமான '800' படத்தில் முரளிதரன் மனைவி மதிமலர் கதாபாத்திரத்தில் மகிமாதான் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீடு மும்பையில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா மற்றும் முரளிதரன் ஆகியோருடன் மகிமாவும் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சி குறித்து, “இதைவிட அதிகமாகக் கேட்டிருக்க முடியாது. மூன்று லெஜண்டுகள் ஒரே பிரேமில்... இத்தருணத்தை என்றென்றும் போற்றுவேன். எனது அடுத்த படமான '800' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இருந்து சில படங்கள்... இப்படத்தில் முரளிதரன் சாரின் மனைவி மதிமலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நீங்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்கும் வரை காத்திருக்க முடியாது. சச்சின், ஜெயசூர்யா சார் நீங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் திகைத்துப் போய் நிற்கிறேன். இயக்குனர் ஸ்ரீபதி சாருக்கு இதற்காக நன்றி,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.