சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
பிரபல நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷா. மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' படத்தில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராம்கி இணைந்த கைகள், செந்தூர பூவே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இருவரும் தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பார்சன் என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இந்த வீடு தொடர்பாக அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்களது வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.