டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி சிறப்பு வேடத்திலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடத்திலும் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. இவர்களுடன் ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிப்., 9ல் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நிரோஷா, ‛‛இந்த மேடையில் இங்கு நிற்பதற்கும், ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு நன்றி சொல்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அது நடக்காமல் போனது. அந்தசமயம் மிகவும் வருந்தினேன். இப்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளேன். அதுவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். என் 15 வருட கனவு நினைவேறியது. பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதுவும் நடந்தது'' என மகிழ்ச்சி உடன் தெரிவித்தார்.