ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்கி உள்ள படம் 'இறைவன்'. இதில் 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் கதை இதுதான் : ஜெயம்ரவி ஒரு டெரர் போலீஸ் அதிகாரி. கொடூர குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை செய்து பின்னர் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவார். சட்டம் தரும் தண்டனை மிகவும் குறைவாக இருக்கும் என்பது அவரது எண்ணம். இதனால் பல மாறுதல்கள், பதவி இழப்புகளை சந்தித்தவர். அவருக்கு சிறுமிகள், இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ ராகுல் போஸை வேட்டையாடும் அசைன்மெண்ட் தரப்படுகிறது. இதனை அவர் எப்படிச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜெயம் ரவியின் மனைவியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அவருக்கும் சைக்கோ ராகுல் போசுக்கு இருக்கிற ஒரு தொடர்பு சஸ்பென்ஸ்.
தனது முந்தைய படங்களில் மென்மையாண கதை களத்தை கையாண்ட அஹமத் இந்த படத்தில் கொடூர கொலை களத்தை கையில் எடுத்திருக்கிறார். 'ராட்சஷன்', 'போர்த் தொழில்' வரிசையில் ரத்தம் தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் படமாக படம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து அஹமத் கூறும்போது “இது மர்டர் மிஸ்ட்ரி சைக்கோ த்ரில்லர் கதை. இதற்கு முன் இந்த சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும் புதிதாக ஒரு கதையை இதில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஜெயம்ரவி இதற்கு முன் பல படங்களில் போலீசாக நடித்திருந்தாலும் இதில் அவர் முற்றிலும் வேற மாதிரியான போலீஸ். நாயகனுக்கு நிகரான கேரக்டர் வில்லன் ராகுல் போசுக்கு. இத்தனை கொடூரமான வில்லனை இதற்கு முன் பார்த்தில்லை என்கிற அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும். நயன்தாரா கேரக்டர் பற்றி விரிவாக இப்போது சொல்ல முடியாது. படம் வந்ததும் அனைவரையும் அவரது கேரக்டர் ஆச்சர்யப்படுத்தும்” என்றார்.