சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 7' தெலுங்கு நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. 14 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
'குஷி' படத்தின் புரமோஷனுக்காக அவர் சென்றார். நிகழ்ச்சியின் மேடையில் அவரை வரவேற்ற நாகார்ஜூனா, “எங்கே படத்தின் கதாநாயகி சமந்தா” எனக் கேட்டார். அதற்கு விஜய் தேவரகொண்டா, “அவர் அமெரிக்காவில் 'குஷி' படத்தின் புரமோஷனுக்காகவும், அவரது சிகிச்சைக்காகவும் சென்றுள்ளார், இரண்டு நாளில் வந்து விடுவார்,” என பதிலளித்தார்.
“நீங்களும் சிறந்த நடிகர், சமந்தாவும் சிறந்த நடிகை, நீங்கள் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறீர்கள். யார் யாரை டாமினேட் செய்து நடித்தீர்கள்,” எனக் கேட்டார் நாகார்ஜூனா.
அதற்கு விஜய் தேவரகொண்டா, “முயற்சி பண்ணேன் சார், ஆனால், எப்போதுமே மனைவிதானே சார் டாமினேட் செய்வார்கள். உங்க லைப்ல யார் சார் டாமினேட் செய்றாங்க,” எனக் கேட்டார். “என் லைப்பில் நான்தான் டாமினேட்,” என நாகார்ஜுனா பதிலளித்தார்.
சமந்தாவைப் பற்றி அவரது முன்னாள் மாமனரான நாகார்ஜூனா விசாரித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




