படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம், பி. வாசு இயக்கத்தில் 65வது படமாக தயாராகியுள்ளது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.
தற்போது படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று நடந்த விழாவில் காமெடி நடிகர் கூல் சுரேஷ், ராகவா லாரன்ஸை 'சூப்பர் ஸ்டார்' என்று பலமுறை குறிப்பிட்டு பேசினார். இதனால் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்து ராகவா லாரன்ஸ் பேசியதாவது:
இந்த படத்திற்காக முதலில் சூப்பர் ஸ்டாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நடிப்பில் 'சந்திரமுகி' படம் வெளியாகி பெரிய வெற்றியை பெறவில்லை என்றால், 'சந்திரமுகி 2' இல்லை. ஒரு பெரிய மரத்தை நட்டு வைத்து சென்றிருக்கிறார். அதில் கிடைக்கும் பழங்களையும், பலன்களையும் நாம் சாப்பிட்டு அனுபவிக்கிறோம். கூல் சுரேஷ் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் பேசும் போது பலமுறை என்னை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் என்னை இணைத்து பேசியதால், அதற்கு நான் விளக்கம் தர வேண்டி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது, யாரிடமாவது கேட்டிருக்கிறாரா? அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா?. நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்பார். விஜய்க்கு ரஜினி சார் மீது மரியாதை இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் போது, 'பீஸ்ட் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது என்று சொல்வார். அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் இங்கு அண்ணன் தம்பிகளாய், ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரித்து விடாதீர்கள்.
இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பதுதான். படத்தில் ஒரு வசனம் இடம் பெறுகிறது. அந்த வசனத்தை பேசிவிட்டு, நான் நடந்து வந்து ஓரிடத்தில் நிற்க வேண்டும். அந்தக் காட்சியை நான் முதல் முறை நடிக்கும் போது, பி வாசு குறுக்கிட்டு, 'ரஜினி.. சார் தெரிகிறார். அதை தவிர்த்து விடுங்கள் அல்லது அதனை குறைத்து விடுங்கள்' என்றார். அதன் பிறகு அவரிடம் நான் அந்த நடையை நீங்கள் நடந்து காட்டுங்கள். உங்களைப் பார்த்து நான் நடிக்கிறேன் என்றேன். அவரும் ஒரு முறை நடந்து காட்டினார். பிறகு அதை போல் நடக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம், சார் நீங்கள் கூட ரஜினி சார் போலத்தான் நடக்கிறீர்கள் என்று சொன்னேன்.
எங்களிடமிருந்த சவாலே இதுதான். எங்களிடமிருந்து ரஜினியை பிரிக்க முடியவில்லை. இருந்தாலும் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும், நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சேரும்.
இவ்வாறு அவர் பேசினார்.