ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் |
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் படங்களையும், வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இன்று தனது 46வது பிறந்தநாளை விஷால் கொண்டாடுகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து விஷால் இரண்டு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விஷால் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். இதுதொடர்பாக புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.