பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
கேரளாவை சேர்ந்த அனு இம்மானுவேல் அங்கு ஒரு சில படங்களில் நடித்து விட்டு தமிழில் 'துப்பறிவாளன்' படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடித்தார். தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னிடம் சிலர் தவறாக அணுகினார்கள். பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா என்று சில பெரிய மனிதர்கள் என்னை அழைத்தனர். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் இதற்கெல்லாம் பயப்படாமல் எனது குடும்பத்தினரின் துணையோடு எதிர்கொண்டு சமாளித்தேன்.
இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது குடும்பத்தினரோடு சேர்ந்து எதிர்கொள்வதுதான் நல்லது. குடும்பத்தினர் நமக்கு உதவியாக இருப்பார்கள். பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் மோசமான நபர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து பயம் கொள்ளாமல் துணிச்சலாக முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.