அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‛கிக்'. சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், கிக் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது சந்தானம் கூறியதாவது: தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் வரை இந்த படத்தை நடத்தி முடித்தனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.
ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற, வெற்றிக்கு உத்தரவாதம் தருகின்ற கான்செப்ட்டில் தான் இந்த படம் உருவாகியுள்ளது. பல ஹீரோக்களின் படங்களில் நான் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோ கூடவே இருந்து கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறேன். அப்படி இந்த படத்தில் தம்பி ராமையா அண்ணன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். இந்த கிக் படம் வேற மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.