விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு பிரபல கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். மறுபுறம் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் அரசியல் சமூக கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடல் மெலிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பலரையும் வியப்படைய செய்துள்ளார். தனது நீண்ட தலைமுடியை ஷார்ட்டாக கட் செய்துக் கொண்டது போல இருக்கும் போட்டோக்களை ‛மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற கேப்ஷனுடன் குஷ்பு பகிர்ந்துள்ளார். இது உண்மையான தோற்றமா அல்லது அடுத்த சீரியலுக்கான கெட்அப்பிற்காக ‛விக்' வைத்துள்ளாரா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பற்றி குஷ்பு தான் தெளிவுப்படுத்த வேண்டும்.