ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன் இந்தப் படத்தை அவரே இயக்கியும் உள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் 'எமர்ஜென்சி' படத்தை பார்க்க தான் ஆவலாக இருப்பதாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
பாலிவுட் செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு கங்கனாவுக்கும் கரண் ஜோஹருக்கும் இடையேயான பல வருட மோதல் குறித்து நன்றாகவே தெரியும். குறிப்பாக நெப்போட்டிசத்தை வளர்த்து விடுபவர் என்கிற ரீதியில் தொடர்ந்து கரண் ஜோஹர் மீது விமர்சனங்களை அடுக்கி வருபவர் தான் கங்கனா. இந்த நிலையில் தனது படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவலாக இருப்பதாக கூறியதற்கு தனக்கே உரிய நக்கலான பாணியில் பதிலளித்துள்ளார் கங்கனா.
இது குறித்து அவர் கூறும்போது, “ஏற்கனவே எனது இயக்கத்தில் மணிகர்ணிகா படம் வெளியானபோது இதே போல் தான் கூறினார் கரண் ஜோஹர். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு அவர் மட்டுமல்ல, அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் சேர்ந்து படத்தை சகட்டுமேனிக்கு விமர்சித்து நன்றாக ஓட வேண்டிய படத்தை அந்த வார இறுதியிலேயே சரிவுக்கு தள்ளி சந்தோஷப்பட்டார்கள். இப்போது எமர்ஜென்சி படத்தையும் பார்க்க கரண் ஜோஹர் ஆவலாக இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டவுடன் நான் பயந்துவிட்டேன்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.