பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த 'துணிவு' படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான் கொக்கேன், தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.
இயக்குனர் பாவ் துலியா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய வெப் சீரிஸ் தி ப்ரிலான்சர். (The Freelancer). கிரியேட்டிவ் ஹெட்டாக நீரஜ் பாண்டே பணியாற்றும் இந்த வெப் தொடர், ஒரு புனைக்கதை மற்றும் "எ டிக்கெட் டு சிரியா" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஜான் கொக்கேன் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். விடாமுயற்சியுடன், உண்மையைக் கண்டறியவும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும் அதிகாரியாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜான் கொக்கேன் கூறுகையில், 'துணிவு' படப்பிடிப்பில் நான் பாலிவுட்டில் நடிப்பேன் என்று அஜித் கணித்திருந்தார். அவர் சொன்னது போலவே இந்த இந்தி வெப் சீரிஸில் துணிவு முடிந்த உடனேயே கையெழுத்திட்டேன். அவர் கூறியது போல நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனுபம் கெர் போன்ற மூத்த பாலிவுட் நடிகர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் காம்பினேஷன் காட்சிகளும் இருக்கு. இது ஒரு நேர்மறையான பாத்திரம் மற்றும் வெப் சீரியஸ்யில் ஒரு முக்கிய பாத்திரம் என்று கூறினார்.