சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” |
தமிழில் தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வந்த அட்லி முதல்முறையாக பாலிவுட்டில் நுழைந்து ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தான் மட்டும் சென்றது மட்டுமல்லாமல் விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களையும், இசையமைப்பாளர் அனிருத்தையும் கூடவே அழைத்துச் சென்று பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியும் உள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக சர்வதேச சண்டை பயிற்சி இயக்குனர்கள் 6 பேரை அழைத்து வந்து பணியாற்ற வைத்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை அதிகாரிகளிடம் இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஏழு இடங்களில் மாற்றங்களை செய்யும்படி கூறியுள்ளனர். குறிப்பாக படத்தில் இடம்பெறும் ஒரு தற்கொலை காட்சியைசியும் தலையை துண்டாக வெட்டி தெரியும் காட்சியையும் நீக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த மாற்றங்களை செய்து தற்போது யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது ஜவான் திரைப்படம்.