ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் சித்தார்த் நடித்து கடைசியாக வெளிவந்த 'டக்கர்' திரைப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது சித்தார்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சித்தா' . இந்த படத்தை சேதுபதி பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த் தனது எடக்கி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். பாடல்களை திபு நிணன் தாமஸூம், பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ளனர்.
இப்படம் சித்தப்பா மற்றும் மகளின் உறவை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி இருவரும் டுவிட்டரில் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.