நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான 'சித்தா' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை நிமிஷா சஜயன். அதன் பிறகு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்திலும் 'சொள' என்கிற படத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் மூலமும் கவனம் ஈர்த்தார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நிமிஷா சஜயன், சமீபத்தில் கொச்சியில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து கொண்டாடினார். இந்த விசேஷ நிகழ்வு நடந்து ஒரு வாரமே ஆகி உள்ள நிலையில் தற்போது அவரது சகோதரி நீத்துவின் திருமணமும் கார்த்திக் சிவசங்கர் என்பவருடன் தற்போது நடைபெற்றுள்ளது.
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள நிமிஷா சஜயன், “எனக்கு ஆனந்தத்தால் கண்ணீர் வருகிறது.. ஆனால் என் இதயம் முழுவதும் புன்னகையால் நிரம்பி இருக்கிறது” என்று கூறியுள்ளார். வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்ற முன்னோர்களின் மொழிக்கு ஏற்ப கடந்த ஜனவரி மாதம் தான் தனது தந்தை மறைந்த நிலையில், தனது சொந்த காலில் நின்று வீட்டை கட்டியதுடன் சகோதரியின் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ள நிமிஷா சஜயனை திரையுலகத்தை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.