'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டியநாடு படத்தின் மூலம் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சரத் லோகிதஸ்வா. வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இவர், கடந்த வருடம் துளு மொழியில் வெளியாகி பல சர்வதேச விருதுகளை பெற்ற 'பிடாயி' என்கிற படத்தில் ஒரு சாமியாடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத் லோகிதஸ்வா. அதாவது கிராமத்தில் அம்மனிடம் இருந்து குறி கேட்பவர்களுக்கு அவரின் அருள் பெற்று குறி சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்தேன். நம் வீட்டில் கடவுள் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கும். கிராமத்தைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை இருக்கும். அப்படி ஒரு காட்சியில் அம்மன் அருள் என் மீது வந்து இறங்குவது போன்று நடிக்க வேண்டும். நாம் என்னதான் கடவுள் நம்பிக்கை குறித்து சில விஷயங்களை லாஜிக்காக கேள்வி எழுப்பினாலும் அந்த காட்சியில் நடிக்கும்போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பரவசம் பட்டதை உணர்ந்தேன். அது காட்சியிலும் வெளிப்பட்டது. நல்ல வேலையாக இயக்குனர் அதை சரியான முறையில் படமாக்கி என்னை அமைதிப்படுத்தினார்.
இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் கூட என் மனதிற்கு திருப்தி. பலர் நினைப்பது போல நான் ஒன்றும் அதிக சம்பளம் கேட்பவனோ அல்லது அணுக முடியாதவனோ அல்ல.. நல்ல கதையுடன் யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம்” என்று கூறியுள்ளார்.