பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
இந்தியன் 2, மிஸ் யூ படங்களுக்கு பிறகு தற்போது டெஸ்ட், இந்தியன் 3 மற்றும் தனது 40வது படத்திலும் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நீங்கள் ஏன் இன்னும் பெரிய ஸ்டார் ஆகவில்லை என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்களின் இடையை கிள்ளுவது, அவர்களை அடித்து கொடுமைப்படுத்துவது, பெண்களை கட்டுப்படுத்துவது இது போன்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடிப்பதில்லை. காரணம் நான் எப்போதுமே பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடந்து கொள்வேன். அதை மீறும் வகையிலான வேடங்களில் நான் ஒருபோதும் நடிப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்போதோ நானும் பெரிய ஸ்டார் நடிகராகி இருப்பேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.