ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. இப்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது.
லியோ இசை வெளியீட்டு விழாவை முதலில் துபாயில் நடத்த திட்டமிட்டனர். ஏதோ ஒரு சில காரணங்களால் பின்னர் மலேசியாவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டனர். கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இப்போது ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் லியோ பட இசை வெளியீட்டு விழாவை சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.