'சலார்' டிரைலர் - மற்றுமொரு 'கேஜிஎப்' சாயல் படமா ? | அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல் | பெங்களூர் டேஸ் பைக் ரேஸ் காட்சி : அஞ்சலி மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் | பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி | மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள் | அஜித் - வெற்றிமாறன் கூட்டணி? | 18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் | ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படம் | அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ |
மலையாளத்தில் கடந்த மே மாதம் பைனரி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜாசிக் அலி என்பவர் இயக்கியிருந்தார். இதில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார் என்றும், தொடர்ந்து பலமுறை ஏமாற்றி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார் என்றும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களாகவே தலைமறைவாக இருந்த ஜாசிப் அலியை கோயிலாண்டி போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் நடக்காவு என்கிற பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஜாசிக் அலியை போலீசார் கைது செய்தனர்.