''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்த தகவல்களை சேகரித்து அதனைக்கொண்டு திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். அதற்கான வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் 24 பிரேம்ஸ் பேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் தனது கனவு திரைப்படமான 'கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை' என்னும் படத்தில் கண்ணப்பா வேடத்தில் நடிக்கிறார் விஷ்ணு மஞ்சு. கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்லி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'மஹாபாரதம்' தொடரை இயக்கிய முகேஷ் சிங் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு கூறுகையில், “மிகுந்த உற்சாகத்துடனும், பெருமிதத்துடனும், எனது நேசத்துக்குரிய படைப்பான 'கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை' படத்தை துவங்கியிருக்கிறேன். இந்த திரைப்படம் தலைசிறந்த படைப்பாகவும், அன்பின் உழைப்பாகவும் பல ஆண்டுகளாக கவனமாக வளர்க்கப்பட்டது. 'கண்ணப்பாவின்' ஆழமான கதை பல தலைமுறைகளாக சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம், காலங்காலமாக ஆழ்ந்த பயபக்தியை பெற்றுள்ளது. இந்தப் படம் என்னுடைய அடங்காத ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கிறது.''என்றார்.