பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‛லியோ'. அவருடன் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. லோகேஷின் வழக்கமான அதிரடி ஆக் ஷன் படமாக அதன் உடன் போதை தொடர்பான கதைகளத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
விஜய், சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்தநாளின் போது அவர்களின் கேரக்டர் போஸ்டர், வீடியோ வெளியிடப்பட்டது. அதேப்போன்று நடிகர் அஜர்ஜூனுக்கு இன்று (ஆக 15) பிறந்தநாள் என்பதால் அவரின் கேரக்டரை வீடியோ உடன் வெளியிட்டுள்ளனர். இதில் ஹரால்டு தாஸ் என்ற வில்லன் கேரக்டரில் அர்ஜூன் நடித்திருப்பது தெரிகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் காரில் இருந்து இறங்கி வரும் அர்ஜூன் ஒருவரின் கையை வெட்டுகிறார். முகத்தில் இரத்தம் தெறிக்க, கன்னத்தில் சிறு தழும்புடன் வாயில் புகைத்தபடி ‛தெறிக்க' என பேசி உள்ளார் அர்ஜூன்.