'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தை அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள ‛கிக்' என்ற படம் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து என்.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சந்தானம். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் டி.இமான் தற்போது பாடல் பதிவு செய்து வருகிறார். அவரது இசையில் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் அவருடன் இணைந்து அரபிக் குத்து பாடலை பாடியிருந்த ஜொனிதா காந்தி, இப்படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
இது குறித்து டி.இமான் வெளியிட்டுள்ள பதிவில், சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்காக தான் கம்போசிங் செய்துள்ள ஒரு பாடலை ஜொனிதா காந்தி பாடியதாகவும், சமீபத்தில்தான் இந்த பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இமான், இந்த பாடலை முத்தமிழ் எழுதியுள்ளார் என்றும், ஜொனிதா காந்தியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஜொனிதா காந்தியும், இது ஒரு அற்புதமான பாடல். இந்த பாடலை கூடிய சீக்கிரமே அனைவருமே கேட்பீர்கள் என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.