பிளாஷ்பேக்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்த சரிதா | 'மத கஜ ராஜா' படத்திற்குக் கிடைத்த விமோசனம் : இந்தப் படங்களுக்குக் கிடைக்காதா ? | பிளாஷ்பேக்: கே.சுப்ரமணியம் மனைவியுடன் நடித்த படம் | ஜனவரி இரண்டாவது வாரத்தில் இரண்டே படங்கள் ரிலீஸ் | ஆஸ்கர் நாமினேஷனில் 7 இந்தியப் படங்கள் | சவுந்தர்யாவின் லவ் புரொபோஸ் ஸ்கிரிப்ட்டா? விஷ்ணு பளீச் பேட்டி | 'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விகாஸ் | நடிகை வடிவுக்கரசியை புகழ்ந்த ஸ்ரீகுமார் | இனி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் - கலையரசன் | தெலுங்கு இயக்குனர் மீது பூனம் கவுர் குற்றச்சாட்டு |
கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய இரண்டு படங்களும் நெல்சனுக்கு ஹிட்டாக அமைந்த நிலையில், விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியடைந்தது. என்றாலும் அதையடுத்து ரஜினி நடிப்பில் அவர் இயக்கி உள்ள ஜெயிலர் படம் ஹிட் அடித்துள்ளது. இதனால் நெல்சன் அடுத்து இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ரஜினி - விஜய் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இதுவரை நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய நான்கு படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அதை விரைவில் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார் நெல்சன். மேலும், விஜய்- அஜித்தை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நீண்ட காலமாகவே கூறி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்நிலையில் தற்போது ரஜினி, விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நெல்சனும் கூறி இருக்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.