ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் | ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் | தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை? |
ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் 'இங்கு நான்தான் கிங்கு'. இப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான 10 வினாடி புரோமோ வீடியோ ஒன்று டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோசமான ஒரு கெட்ட வார்த்தையை சந்தானம் பேசியுள்ளார். அந்த வார்த்தையுடனேயே புரோமோ வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் இப்படி கெட்ட வார்த்தைகளுடன் படங்களின் டிரைலர்கள் வெளிவருவது பேஷனாகிவிட்டது. அதனால், ஏதாவது சர்ச்சைகள் உருவாகும். அதை வைத்து பரபரப்பை ஏற்படுத்தலாம் என யாரோ மோசமான மார்க்கெட்டிங் டெக்னிக்கை சொல்வதே அதற்குக் காரணம்.
'யு' சான்றிதழ் பெற்ற ஒரு படத்தின் புரோமோ வீடியோவில் கெட்டவார்த்தை இடம் பெறுவது எப்படி ?.