ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் |
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ., ஆகிய அணிகளுக்கு இடையேதான் மீண்டும் முக்கிய போட்டி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் அத்தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால், என்ன மாதிரியான மாற்றம் வரும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.
விஜய் ஒரு பக்கம் புதிய கட்சி துவங்கி தீவிர அரசியலில் இறங்க உள்ள நிலையில் நடிகர் விஷாலும் 2026 தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் அவருடைய ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் முடிவில் இறங்கியுள்ளாராம். தமிழகத்தில் அனைத்து வார்டுகளிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என அவரது ரசிகர் மன்றம் முன்னெடுத்து வருகிறதாம்.
சென்னையை விட்டு மும்பையில் செட்டிலாகிவிட்ட சூர்யா, தமிழக அரசியலில் இறங்குவாரா என்பது எதிர்வரும் காலத்தில் தெரியும்.