நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
8 தோட்டாக்கள், ஜீவி போன்ற படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் படம் ‛லாக் டவுன் நைட்ஸ்'. முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படத்தை ‛2 எம் சினிமா' வினோத் சபரீஷ் தயாரிக்க, ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். பூச்சாண்டி படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன், கங்கை அமரன், பென்குயின் படத்தில் வில்லனாக நடித்த மதியழகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டார்.