'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நவீன் மேடாராம் இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா இணைந்து நடித்து வரும் படம் 'டெவில்'. சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் இந்த படத்தில் பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் ஆக நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் 'டெவில்' என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி தொடர்புடைய கதையில் வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாகிறது.