ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் |
யு டியுப் வீடியோ தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் பாடல்கள்தான் தற்போது சூப்பர் ஹிட் பாடல்களாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களில் அனிருத் தான் முன்னணியில் உள்ளார்.
அவரது இசையில் வெளிவந்த “அரபிக்குத்து (பீஸ்ட்), வாத்தி கம்மிங் (மாஸ்டர்), ஒய் திஸ் கொலவெறி (3), மரணமாஸ் (பேட்ட), டானு டானு (மாரி), 'தாராள பிரபு' டைட்டில் டிராக், செல்பி புள்ள ( கத்தி), தாய் கிழவி (திருச்சிற்றம்பலம்), செல்லம்மா (டாக்டர்), தர லோக்கல் (மாரி), மேகம் கறுக்காதா (திருச்சிற்றம்பலம்), ஆலுமா டோலுமா (வேதாளம்), குட்டி ஸ்டோரி (மாஸ்டர்), டிப்பம் டப்பம் (காத்துவாக்குல ரெண்டு காதல்), பத்தல பத்தல (விக்ரம்), சொடக்கு மேல (தானா சேர்ந்த கூட்டம்), டூ டூ டூ (காத்துவாக்குல ரெண்டு காதல்), ஜலபுலஜங்கு (டான்), ஆகிய 19 பாடல்கள் அனிருத்தின் 100 மில்லியன் பாடல்களாக உள்ளன.
அந்த வரிசையில் தற்போது 20வது பாடலாக 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் 100 மில்லியனைக் கடந்து இணைந்துள்ளது. ரஜினியா, விஜய்யா என தற்போது ஒரு போட்டி போய்க் கொண்டிருக்கும் நிலையில் 'லியோ' படத்தின் 'நான் ரெடி' பாடல் 87 மில்லியனை மட்டுமே ஒரு மாத காலத்தில் கடந்திருக்கிறது. ஆனால், அதற்கடுத்து வெளிவந்த 'காவாலா' பாடல் 100 மில்லியனைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.