சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள திரைப்படம் ' ஜெயிலர்'. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சுனில், யோகிபாபு, மிர்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஆக., 10ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்குவதால் யு-டியூப்பில் புரொமோஷனுக்காக பேட்டி அளித்துள்ளார் சிவராஜ்குமார். அதில் அவர் கூறியதாவது, " ரஜினி சாரின் ஸ்டைல், வாக் எல்லாருக்கும் பிடிக்கும். ஜெயிலர் படத்தில் மொத்தமாக 11 நிமிட காட்சிகள் மட்டுமே வருவேன். ஒரு முக்கிய காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் வருவேன் " என தெரிவித்துள்ளார் .




