ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக உள்ள சில முக்கியப் படங்களில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' படமும், தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படமும் உள்ளது. 2024ல் வெளியாக உள்ள 'கங்குவா' படத்தின் வீடியோ முன்னோட்டம் ஒன்றை 'க்ளிம்ப்ஸ்' என ஒரு வாரத்திற்கு முன்பு சூர்யாவின் பிறந்த நாளில் வெளியிட்டனர்.
அதன் தமிழ் வீடியோ 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து தமிழ் சினிமாவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற 'க்ளிம்ப்ஸ்' என்ற சாதனையைப் படைத்தது. கடந்த எட்டு நாட்களில் அதன் பார்வை 31 மில்லியனைத் தாண்டியுள்ளது. சூர்யாவின் படங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் பார்வைகளை விட இது மிக அதிகம்.
இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் மூன்று தினங்களுக்கு முன்பு வெளியானது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற புதிய சாதனையை இது படைத்தது. இந்த மூன்று நாட்களில் 27 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.
'கங்குவா' பட க்ளிம்ப்ஸ், 'கேப்டன் மில்லர்' பட டீசர் இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு புதுப் புது சாதனைகளைப் படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் வீடியோக்கள் அடுத்த கட்டமாக அதிகப் பார்வைகளைப் பெற ஆரம்பித்துள்ளன.
இந்த சாதனைகள் 'ஜெயிலர், லியோ' ஆகியவற்றின் டீசர் அல்லது டிரைலர் வரும் போது இன்னும் அதிகமான பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.