சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கன்னடத்தில் கடந்த 2009ல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் என்கிற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2020ல் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறைச்சாலைக்கும் சென்று வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஷீலா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது.
சில உண்மைகளை தேடி கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பயணிக்கும் ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையப்படுத்தி நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மோகன்லாலுடன் காந்தகார் மற்றும் 2012ல் மம்முட்டியுடன் பேஸ்புக் 2 பேஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள ராகினிக்கு 11 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.




