மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் தான் நடித்து வந்த சிட்டாடல் என்கிற வெப் தொடரையும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார். பொதுவாக படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஆன்மீக சுற்றுலாவோ அல்லது தனது நண்பர்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவது சமந்தாவின் வழக்கம். அதிலும் அவர் தற்போது படப்பிடிப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது நண்பர்களுடன் பாலி தீவிற்கு உற்சாக சுற்றுலா சென்றுள்ள சமந்தா, விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.
மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது பாலி தீவில் உள்ள உபத் குரங்கு காட்டிற்கு தனது தோழியுடன் விசிட் அடித்ததுடன் அங்குள்ள குரங்கு ஒன்றுடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.. இல்லை இல்லை அங்குள்ள குரங்கு ஒன்று சமந்தாவுடன் செல்பி எடுத்து அவரை மகிழ்வித்துள்ளது. என்று சொல்லலாம் இதுகுறித்து ஸ்பாட் தி மங்கி என்கிற கேப்சனுடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.