மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
மலையாள நடிகர் பிரித்விராஜ் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ் அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலும் தானும் இணைந்து நடித்த ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அதேசமயம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிஸியான வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிரித்விராஜிடம் தனக்காக ஒரு படம் இயக்க முடியுமா, கதை இருக்கிறதா என பிரபாஸ் கேட்டபோது அசத்தலான கதை ஒன்றை கூறி பிரபாஸை ஆச்சரியப்படுத்தினாராம் பிரித்விராஜ். அடுத்ததாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார் பிரித்விராஜ். அந்த வகையில் பிரித்விராஜ் மற்றும் பிரபாஸ் தங்களது அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு புதிய படத்திற்காக இணைய வாய்ப்பு உண்டு என்று தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.