சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் சனுஷா. சுமார் 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். தமிழில் காசி, சுந்தரா டிராவல்ஸ், பீமா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'ரேணிகுண்டா' படத்தில் ஹீரோயின் ஆனார். மலையாளத்தில் 'மிஸ்டர் மருமகன்' படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் சமீப ஆண்டுகளாக வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் கொடிவீரன் படத்தில் நடித்தார், அதன் பிறகு தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகும் 'ஜலந்தரா பம்ப்செட் சின்ஸ் 1962' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் ஊர்வசி, டிஜி ரவி, ஜானி ஆண்டனி, அஞ்சலி சுனில் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஷிஷ் சின்னப்பா இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கைலாஸ். வொண்டர்பிரேம்ஸ் பிலிம்லேண்ட் பேனரில் இந்தப் படம் தயாராகிறது.