லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் ரேணிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு சில படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் தங்கை கதாபாத்திரங்களுமே கிடைத்து வந்தன.
தமிழில் 2017ல் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு 2019-ல் தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தில் நடித்தவர் பின்னர் நடிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை இரண்டு வருடமாக படித்து வந்தார். தற்போது படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டமும் பெற்று விட்டார் சனுஷா சந்தோஷ்.
இது குறித்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள அவர், ‛‛கடந்த இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் பண்ணியது, அழுதது, தூக்கம் இல்லா இரவுகள், நிறைய பார்ட் டைம் புல் டைம் வேலைகள், கடினமான பணிகள் மற்றும் உடல் நலக்குறைவு, மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து இந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை இப்போது பெற்றுள்ளேன்'' என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.