'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
மலையாள திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி. அதேபோல என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த சீனியர் இசை அமைப்பாளர் ரமேஷ் நாராயண். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான எம்டி வாசுதேவன் கதைகளை வைத்து மம்முட்டி, மோகன்லால், கமல், பஹத் பாசில் உள்ளிட்டோர் தனித்தனியாக நடித்துள்ள மனோரதங்கள் என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆசிப் அலியும், ரமேஷ் நாராயணும் கலந்து கொண்டனர். அப்போது ரமேஷ் நாராயணுக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கும்படி ஆசிப் அலியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஆசிப் அலியிடம் இருந்து அதைப்பெற்றுக் கொள்ள விரும்பாத ரமேஷ் நாராயண் அதை அவரிடமிருந்து பிடுங்கி அருகில் இருந்த இயக்குனர் ஜெயராஜிடம் கொடுத்து, பின்னர் அவர் கைகளில் இருந்து பெற்றுக் கொண்டார்.
அவரது இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. சோசியல் மீடியாவில் பலரும் அவரை தாக்கி பதிவிட துவங்கினர். இதனைக் கண்டு ரமேஷ் நாராயண் தனது செயலுக்காக ஆசிப் அலியிடம் வருத்தம் தெரிவிப்பதாக பொது வெளியில் கூறினார். ஆனால் ஆசிப் அலியோ இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க தேவையில்லை என்றும் அவர் நடந்து கொண்டதை வைத்து ரசிகர்கள் அவர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், அதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன், இதை இத்தோடு விட்டு விடுங்கள் என்றும் கூற அதன் பிறகு ஓரளவுக்கு இந்த சர்ச்சையின் தீவிரம் குறைந்தது.
அவரது இந்த பக்குவமான செயல்பாட்டுக்கு ரசிகர்களும் சிறையில் சேர்ந்த சிலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் நடிகை அமலாபாலும் அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அமலா பால் கூறும்போது, “இந்த விஷயத்தை ஆசிப் அலி எவ்வாறு கையாண்டார் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் எழுந்து கொண்டு தான் இருக்கும். அதை ஒருவர் எப்படி கையாளுகிறார் என்பதுதான் விஷயமே” என்று கூறியுள்ளார்.
ஆசிப் அலி மற்றும் அமலா பால் இருவரும் விரைவில் வெளியாக உள்ள லெவல் கிராஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.