மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு |

கடந்த வாரம் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் மும்பையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான்கான் போன்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதுடன் இளைஞர்களைப் போல உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மகேஷ்பாபு, ராம்சரண், சூர்யா, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் தம்பதி சகிதமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்,
அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் ஆர்வமாக இணைந்து புகைப்படங்களும் செல்பிகளும் எடுத்துக் கொண்டு சோசியல் மீடியாவில் வெளியிட்டு தங்களது ரசிகர்களை பரவசப்படுத்தினர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் விக்னேஷ் சிவனுடன் நடிகர் மகேஷ்பாபு, அவரது மனைவி நம்ரதா, நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, ஜெனிலியா என முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றாக இடம் பெற்றுள்ளனர்.




