கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ரேனிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு 2016 வரை ஓரளவு கதாநாயகி மற்றும் தங்கை கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருந்தன. தமிழில் 2017ல் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தார் சனுஷா.
அதே சமயம் மலையாளத்தில் 2016ல் தான் கடைசியாக இவர் நடித்த படம் வெளியானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சனுஷா. தற்போது ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஊர்வசியுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'ஜலதார பம்பு செட் சின்ஸ் 1962' என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது.
மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மலையாள திரையுலகத்திற்கு திரும்பி உள்ளது குறித்து சனுஷா கூறும்போது, “மலையாள திரையுலகை கடந்த ஆறு வருடங்களாக ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதே சமயம் ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வருகிறேன். அதிலும் இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார் சனுஷா.