'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் சுரேஷ்கோபி மலையாள சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வந்த சமயத்தில் திடீரென அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியதால் சினிமாவில் அவருக்கு ஒரு இடைவெளி விழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கிய சுரேஷ் கோபி தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்தார். அந்த வகையில் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான காவல், பாப்பன் ஆகிய படங்களில் நரைத்த தாடியுடன் வயதான கெட்டப்புகளிலேயே நடித்திருந்தார் சுரேஷ்கோபி.
இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கருடன். இந்த படத்தில் சற்றே வயது குறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் கோபி இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். அதுமட்டுமல்ல தாடிக்கு விடுதலை கொடுத்துள்ள சுரேஷ்கோபி சமீபத்திய கருடன் லுக்கில் பார்ப்பதற்கே ஹேண்ட்சம் ஆகவும் காட்சி அளிக்கிறார்.