சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சனுஷா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இரண்டு மாநில விருதுகளை பெற்றவர். ரேனிண்டா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு நாளை நமதே, நன்றி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக கொடிவீரன் படத்தில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாள சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சனுஷா தனது படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் அதில் அவர் மிகவும் குண்டாக ஆளே அடையாளம் தெரியாத வகையில் காணப்பட்டார். சில ஹார்மோன் பிரச்சினைகள் காரணமா அவர் உடல் எடை கூடிவிட்டதாகவும், அதை குறைப்பதற்கான முயற்சியில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.
என்றாலும் சமூக வலைத்தளங்களில் அவரை உருவக்கேலி செய்து வந்தனர். இதனால் கோபம் அடைந்த சனுஷா அவர்களுக்கு அளித்த பதில் வருமாறு: எனது உடல் எடை பற்றி கவலைப்படுபவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், ஒருவர் எடை குறைப்பதற்காகவும், அழகாக இருப்பதற்காகவும் மட்டுமே உயிர் வாழ்வது இல்லை.
ஒருவரின் உடல் தோற்றத்தை வைத்து தைரியமாக கேலி செய்யும் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒருவரை நோக்கி நீங்கள் விரல் நீட்டும்போது மற்ற விரல்கள் உங்களை நோக்கி இருக்கிறது. ஆகவே நீங்களும் நேர்த்தியானவர் இல்லை. உங்களுக்கு மனரீதியான பிரச்சினை உள்ளது. உங்கள் உடலை கவனித்துக்கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.