பெருகி வரும் நகர்புற நெரிசலுக்கு இடையில் மாடித் தோட்டம் அமைப்பது பெருகி வருகிறது. வாய்ப்புள்ள அனைருமே தங்கள் வீட்டு மொட்டை மாடியில் மாடித் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். நடிகைகள் சுஹாசினி, குஷ்பு, நடிகர் மாதவன் போன்றவர்கள் இதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது புதிய வீட்டில் மாடித் தோட்டம் அமைத்திருக்கிறார். இந்த தோட்டத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:
இதுதான் எனது காய்கறி தோட்டம். ஊரடங்கு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு தான் இந்த தோட்டத்தை தயார் செய்தேன். இப்போது இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்து பயன்படுத்துகிறேன் . இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்று தான் இந்த வீடியோ.
இந்த தோட்டத்தை இன்னும் முழுமையாக தயார் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதெல்லாம் தயாரானதும் திரும்பவும் உங்களுக்கு காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும், இந்த காய்கறி தோட்டம் போன்று செழிப்பாகி விடும். என்றார்.