அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அசின் மற்றும் பலர் நடித்த தசாவதாரம் படம் திரைக்கு வந்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் தனி முத்திரை பதித்த படங்களில் இந்தப் படமும் ஒன்று. கமல்ஹாசன் பத்து விதமான வேடங்களில் இந்தப் படங்களில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.
படத்திலும் பிரம்மாண்டமான பல காட்சிகள் அமைந்து ரசிகர்களை வியக்க வைத்தது. அதற்கு சி.ஜி. என்கிறது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் ஒரு காரணம். 13 வருடங்களுக்கு முன்பு ஒரு தரமான சி.ஜி.யாக அப்படத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் சி.ஜி. சூப்பர்வைசர் ஆக இப்போது இயக்குனராக இருக்கும் கார்த்திக் ராஜு பணியாற்றி இருக்கிறார்.
![]() |
“திருடன் போலீஸ், உள்குத்து” ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. தற்போது கண்ணாடி, சூர்ப்பனகை, த சேஸ் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். தசாவதாரம் படம் பற்றிய அவரது அனுபவத்தை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “தசாவதாரம் 13 வருடங்கள், படத்தின் முதல் 40 நிமிட பிரம்மாண்ட விஷுவல் காட்சிகளில் பணியாற்றியது மிகவும் பெருமை. ஒவ்வொரு சி.ஜி.காட்சியும் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. கற்றுக் கொண்ட மிகப் பெரும் அனுபவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]() |